குள்ள நரித்தனமும் ராஜதந்திரமும் சகலரது வாழ்விலும் இருப்பதே…
அவரவர் பிரச்சனைகளுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றவரை பாதிக்கிறது என்பதை நாம் எப்போதாவது சிந்தித்திருப்போமா …

வெற்றி அடைந்தவன் பார்வையில் அவனது சிந்தனையும் செயலும் ராஜதந்திரம் . அதுவே தோல்வி அடைந்தவன் பார்வையில் வெற்றியடைந்தவன் செயல் குள்ள நரித்தனம் .

ஆனால் இவை (குள்ள நரித்தனம்) எல்லாம் எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே. தமக்கு சாதகம் என நினைத்து செய்யும் பல செயல்கள் பாதகமாய் வருவதும் , எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் செயல்கள் சாதனைகளாய் மாறுவதும் நம் வாழ்வில் கண்ட அனுபவமே .

ஏற்கும் இடர்களும்(risk) பெற்றுக்கொள்ளப்படும் பெறுபேறுகளும்(result) ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதே. இடர் உள்ளது என்பதற்காக இழக்கப்படும் ஒவ்வொரு வாய்ப்புக்களும் எமக்கு நாமே தோண்டப்படும் குழிகள். வெற்றிகள் தேவையாயின் இடர்களையும் குள்ள நரித்தனத்தையும் எதிர்கொள்ளவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது…

முதலும் இறுதியுமாய் ஒன்று தமிழர்களை போல் குள்ள நரித்தனமும் ராஜதந்திரமும் உள்ளவர்கள் யாரையும் நான் கண்டதில்லை(இதுவரை )

சிந்திப்போம் ….
செயல்படுவோம் …
2 Comments for this entry

 • அல்போன்ஸ் சேவியர் says:

  //முதலும் இறுதியுமாய் ஒன்று தமிழர்களை போல் குள்ள நரித்தனமும் ராஜதந்திரமும் உள்ளவர்கள் யாரையும் நான் கண்டதில்லை(இதுவரை )//

  இந்த கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. குள்ள நரிகள் அணைத்து நாடு, மொழி மற்றும் இனத்தை சார்ந்த மனிதர்களிலும் உள்ளன.

  • prasanna says:

   நண்பரே குள்ளநரித்தனம் ராஜதந்திரமும் ஒன்றே ….
   பார்க்கப்படும் விதமே வேறு….
   நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு ராஜதந்திரம் மற்றவர்கள் பார்வைகளுக்கு குள்ளநரித்தனம் ஆக தெரியல்லாம் ….

   நான் யாரையும் குள்ளநரிகள் என குறிப்பிட வில்லை ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *