தம்பி இன்னும் வெளிய போகல்லய

Spread the love

என் மேல் அன்பு கொண்ட பலர் என்னிடம் கேட்ட பல கேள்விகளில் என்னைச் சிந்திக்க வைத்த கேள்வி இது.

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் போது அவர்கள் என்மீது  ஓர்வகை அன்பு வைத்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் இந்த அன்பு என்னை வேறுவிதமாகவும் சிந்திக்க வைத்தது. இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை சகலருக்கும் தெரிவிக்கிறேன் .

இங்கு இருந்து அங்கு போய் உழைப்பதை விட இங்கு இருந்து, இங்கு உழைப்பது மேல். நான் கண்ட பல மேதாவிகள்  எனக்குக் கூறியது இங்கு இனப்பிரச்சனை, மொழிப்பிரச்சனை. ஆனால் அவர்கள் அங்கு சென்று அந்த நாட்டு மொழியைக் கற்பதை விட இங்கு இருந்து நம் சகோதர மொழியைக் கற்று சிறப்படைவதே மேல். இதை நான் இங்கு சொன்னால் எம்மவர்களுக்கு நான் விரோதி ஆகிறேன்

இது மட்டும் இல்லாமல் இங்கு இருந்த நோஞ்சான்கள் அங்கு சென்றதும் வீரன் ஆகும் கதைகள் ஏராளம். இந்த வீரன்கள் அங்குள்ள அப்பாவிகளுடன் சண்டை போட்டு மீண்டும் இங்கு வந்த கதைகளும் ஏராளம். இதை விட இங்கு இருந்து எமக்கு ஏற்ற தொழிலைச் செய்யலாம் எமது தாய் நாட்டில்.

இதை விட பெரும் கொடுமை படிக்கச் சென்ற பண்டிதர்கள் படிக்காமல் பாவைகளுடன் சென்றதும் உண்டு. இப்பேர்பட்டவர்களை நம்பி இங்கிருந்து பெற்றோர்கள் பணம் அனுப்பும் படலம் வேறு நடக்கும்.

இங்கு நடைபெறும் மரணச்சடங்கின், பத்திரிக்கை அறிவிப்பில் போடப்படும் சகல வெளிநாடு வாழ் உறவுகளின் பெயர்களின் பின்னால் போடப்படும் நாடுகளின் பெயர்களைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது, அகதி என  போடுவதற்குப் பதில் நாடுகளின் பெயர்களைப் போட்டுள்ளார்களே என்று. இதற்கு அவர்களே பதில் தரட்டும்…

முதலும் இறுதியுமாய் சகலருக்கும் ஓர் வேண்டுகோள்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்,
ஏன் உடலை வருத்த வேண்டும் வெளிநாட்டில் .


Spread the love

Posted

in

by

Tags:

Comments

2 responses to “தம்பி இன்னும் வெளிய போகல்லய”

  1. Rizi Avatar
    Rizi

    good advice to all our srilankan people specially Tamils & Muslims.

  2. Yogambikai Vijayakumar Avatar
    Yogambikai Vijayakumar

    A very enlightening article with full of meanings which hopefully would be useful to the younger generation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *