அம்பானி பல நாட்கள் தேடிய தேடல், கைவசம் கிடைத்த வாய்ப்பை விடுவதற்கு நான் தயாராக இருக்கவில்லை. ஒரு தனி வர்த்தகம் ஆரம்பிப்பதே என் முதல் இலக்கு. அதற்கான தயார்படுத்தல்களில் அம்பானியைப் பற்றி அறிவதும், அவர்களது வழிமுறைகளை அறிவதும் ஓர் கல்வியே.
சமீபத்தில் கொழும்பில் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது நான் அம்பானி பற்றியோ, தமிழில் அம்பானியின் கதை பற்றியோ சிந்திக்கவில்லை. நான் தேடிச் சென்றது snow ball எனப்படும் ஒரு சுய சரித்திரம்[warren buffett ]. கடைசி வரை என்னால் அந்த புத்தகத்தை வாங்க முடிய வில்லை , இருந்தாலும் சில தமிழ் புத்தகங்களை வாங்கி வந்தேன்.
வாங்கிய அனைத்துப் புத்தகங்களும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள். அதில் அம்பானி ‘ஒரு வெற்றிக் கதை’ என்னும் புத்தகமும் ஒன்று,
முதலில் அம்பானியில் தொடங்குவோம் என்று புத்தகத்தை தூக்கிய முதல் இறுதியில் நானும் ஓர் அம்பானியானோன்.
சிறந்த புத்தகம், 164 பக்கங்களில் முழுமையான வரலாறு. முழுமையாக அம்பானியின் குணம் மற்றும் வியாபார யுக்திகளும் சிறப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பானியின் வியாபாரத் தந்திரங்கள், அணுகு முறைகள், புத்திசாலித்தனம் மற்றும் பல…
ஆசிரியரின்[என்.சொக்கன்] குறிப்புக்கள், எனது அம்பானி பற்றிய அறிவுத் தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும். இன்னும் தேடல் விரும்புபவர்களுக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.
இந்த புத்தகத்தின் சுருக்கம்
“ஆசைப்படு, அதற்கு மேலும் ஆசைப்படு”.
“கனவு காணுங்கள் ”
“வியாபாரி ஆவதற்கு அனைத்தையும் வியாபார நோக்கில் சிந்தியுங்கள் ”

குறிப்பாக அம்பானி ‘ஒரு வெற்றிக் கதை’ முலம் நான் நான் அடைந்த பயன் கோடான கோடிக்கும் மேல்.
இந்திய ரூபா 80, இலங்கை ரூபா 280 [விற்பனை விலை ].
தனி வியாபாரம் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு இது ஓர் சிறந்த முதலீடு.
Leave a Reply